Kavanagar Garjanai

Dedicated to Spiritual Awakening

Kavanagar Ayya's Siva Sith Sabai

Siva Sith Sabai stands as a movement devoted to awakening humanity and supporting human well-being through spiritual awareness, wisdom, and disciplined living.

Explore products
Kavanagar Siva Sith Sabai spiritual banner
Kavanagar Siva Sith Sabai logo

Siva Sith Sabai

Spiritual wisdom and service

Our Story

A Movement For
Inner Awakening

Siva Sith Sabai was founded by Kavanagar Ayya, Thirukkural Rama. Kanaga Subbu Rathinam, as a movement dedicated to the awakening of humanity.

The Sabai carries forward the vision first expressed through Kavanagar Muzhakkam, the monthly magazine established in February 2002 to cultivate spiritual awareness and uplift society.

Rooted in the belief that every human being carries boundless potential, the Sabai helps individuals realize that inner power as a sustained and transformative way of life.

141,0001+

Subscribers

1,300+

Videos of wisdom

200+

Curated products

திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம்

நினைவாற்றல் மன்னர்

திருக்குறள் இராம. கனகசுப்புரத்தினம்

பதினாறு கவனகர், சோடசவதானி

வாழ்க்கைக் குறிப்பு

தம் தந்தையின் மறைவோடு மறைய இருந்த நினைவாற்றல் கலைக்குத் தன்னை ஒப்படைத்து அக்கலைக்குப் புத்துயிர் அளித்தவர்.

இவருடைய தந்தை - பதின் கவனகர் - ‘நினைவுக்கலை ஏந்தல்’ திருக்குறள் பெ. இராமையா அவர்களின் மறைவிற்காக, ‘இலக்கியவிதி’ செங்கற்பட்டில் நிகழ்த்திய இரங்கல் கூட்டத்தின்போது, இந்த அரிய கலையை மீண்டும் உயிர்ப்பிப்பேன் என்றுரைத்தவர் இவர்.

அதற்காக, தாம் செய்து வந்த வருமானம் மிகுந்த தொழில்களைத் துறந்தவர். 12 ஆண்டுகள் சிவகாசி விக்டோரியா மேனிலைப்பள்ளியில் ஆசிரியப்பணி, 4 ஆண்டுகள் ‘பியர்லெஸ்’ சேமிப்பு நிறுவனத்தின் அமைப்பாளர் பணி, துணி வணிக அலுவலம், அறிவுடை மக்களைப் பெற்ற இல்லறம், இளமையில் வறுமை துயரம் இப்படிப் பல நிலைகளில் செறிந்த வாழ்க்கை அனுபவம் பெற்றவர்.

பேச்சில் இனிமை; காட்சியில், உள்ளத்தில் எளிமை; மனத்துக்கண் மாசின்மை; எண்ணிய எண்ணியாங்கு எய்தும் வினைத்திண்மை - இவை, இவரின் தனித்தன்மைகள்!

அரும்பெரும் கூரிய அறிவுடையவர். ஆயிரம் மக்களோடு மக்களாக வாழும், பழகும் இவர் ஒரு ‘மக்கள் அறிவர்’!

17.6.1987 -ல் திருக்கழுக்குன்றத்தில் இலக்கியவிதி அரங்கில் பதின்கவனகராக அரங்கேற்றமாகி, தமிழகமெங்கும் பல்வேறு மேடைகளில், கல்லூரிகளில், பள்ளிகளில், தொலைக்காட்சியில், வானொலியில் இக்கலை நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார்.

இதுவரை, ‘பதினாறு கவனகராக’ உயர்ந்து, தமிழ்நாட்டில் மட்டுமன்றி மலேசியா, சிங்கப்பூர், அந்தமான் தீவுகள், இலங்கை, ஐக்கிய அரபு நாடுகள், அமெரிக்கா, கனடா, ஐரோப்பா, கீழ்த்திசை நாடுகள் என, தமிழ்கூறும் நல்லுலகம் எங்கும் சுற்றி, நம் தமிழ்மறையாம் திருக்குறளைப் பரப்பி வருபவர். வாழ்க்கை பற்றிய விழிப்புணர்வையும், மகிழ்ச்சியான வாழ்வை எப்படி மலரவைப்பது எனும் பயிற்சி வகுப்பையும், நினைவாற்றல் பயிற்சி வகுப்பையும் நடத்தி வருபவர்.

சாதி, மத, கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட இவர் இக்கலைக்கு என்று இருக்கும் தமிழகத்தின் சொத்து! பொதுச் சொத்து!

சென்ற நூற்றாண்டில், ஒரு நூறு செயல்களைச் செய்யும் கவனகர்கள் வாழ்ந்த தமிழ்நாட்டில், இன்று இக்கலைக்கு என்று வாழ்பவர் இவர். இவர்தம் வாழ்வும் வளரும், இக்கலையின் வாழ்வும் வளர்ச்சியும் ஆகும்.

இவருடைய பயிற்சி வகுப்புகள் 5 நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்.

  1. நீண்ட வாழ்வு - Living longer
  2. நலமான வாழ்வு - Living Healthier
  3. வளமான வாழ்வு - Living Wealthier
  4. மகிழ்வான வாழ்வு - Living Happier
  5. அறிவும் விழிப்புணர்வும் உள்ள வாழ்வு - Living with wisdom & Awareness

மேலும் இவர் ‘கவனகர் முழக்கம்’ என்னும் மாத இதழினை 10 ஆண்டுத் திட்டமாகத் தொடங்கி 8வது ஆண்டின் நிலையில் உள்ளது. கவனகர் முழக்கத்தின் அடிப்படை இலட்சியம் நான்கு.

  1. பசிப்பிணியற்ற தமிழ்நாடு
  2. நோயற்ற தமிழ்நாடு
  3. வளம் நிறைந்த தமிழ்நாடு
  4. ஞானம் செறிந்த தமிழ்நாடு

தமிழ் நாட்டில் கடந்த 400 ஆண்டுகளாக இருந்துவரும் ஒரு பழங்காலக் கலையே ‘கவனகம்’ அல்லது ‘அவதானம்’ என்பதாகும்.

இது மனதைக் ‘Computer’ போல் பயன்படுத்திச் செய்யப்படும் வித்தை ஆகும். அதாவது மனிதனின் மனதை (மூளையை) எப்படியெல்லாம் பயன்படுத்திப் பல்வேறு வித்தைகளை நிகழ்த்த முடியும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஊட்டும் ஓர் அற்புதமான கலை நிகழ்ச்சி.

  • 8 வகையான ஆற்றல் புரிவர் - அஷ்டாவதானி
  • 10 வகையான ஆற்றல் புரிவர் - தசாவதானி
  • 16 வகையான ஆற்றல் புரிவர் - சோடசவதானி
  • 100 வகையான ஆற்றல் புரிவர் - சதாவதானி

இவரது தந்தை ம. இராமையா தசாவதானியாகத் திகழ்ந்து ‘அரசவைக் கலைஞராக’ உயர்ந்த பெருமைக்குரியவர்.

நமது கவனகர் இராம. கனகசுப்புரத்தினம் அவர்கள் பதினாறு கவனகராகத் திகழ்ந்ததன் நமக்கெல்லாம் ஞான விழிப்புணர்வூட்டி வாழ்ந்து கொண்டிருப்பவர்.

இவர் நிகழ்த்தும் பதினாறு கவன நிகழ்ச்சிகள்:

  1. குறள் கவனகம்
  2. எண் கவனகம்
  3. எழுத்துக் கவனகம்
  4. பெயர்க் கவனகம்
  5. வெண்பா இயற்றும் கவனகம்
  6. இராகங்களில் கவனகம்
  7. மாயக்கட்டம் நிரப்புதல்
  8. கூட்டல் கவனகம்
  9. பெருக்கல் கவனகம்
  10. 100ஐ முந்தும் கவனகம்
  11. வண்ணக் கவனம்
  12. தொலைபேசி கவனம்
  13. மணியோசை (கேட்டல்)
  14. வாசகக்கவி பூரிப்பு, கருத்தளல்
  15. பிறந்த கிழமையை மறந்த நாள் கூற
  16. திருக்குறளில் பலவிதமான கேள்விகள்

What Guides Us

Awareness, Wisdom, and Service

Awakening

Guiding individuals toward awareness, discipline, and a deeper experience of their inner strength.

Wisdom

Sharing teachings, books, talks, and practical resources that support a steady spiritual life.

Service

Serving human well-being through a movement rooted in compassion, clarity, and community.

YouTube Videos

Featured Spiritual Videos

Watch discourses, spiritual teachings, and community updates from the Sabai.

Open YouTube

Kavanagar, Sri Lanka

Stay connected with Kavanagar Siva Sith Sabai

Shop trusted products